Reliance, Jio என மல்டி பிஸ்னஸ்.. இந்தியாவின் No.1 பணக்காரரான அம்பானியின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..

By Ranjith Kumar on பங்குனி 5, 2024

Spread the love

உலகில் 11வது பணக்காரரான முகேஷ் அம்பானி, தற்போது மார்ச் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை முகேஷ் அம்பானி அவர்களின் பையன் அனந்த அம்பானியின் Pre-wedding தான் உலகத்திலேயே மிக பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த Pre-weddingறகாக மட்டும் இவர் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளார். அப்போ கல்யாணத்துக்கு எவ்வளவு தடபுடலாக இவர் செய்வார் என்று இதிலிருந்து தெரிகிறது.

இவர் இன்னொரு மகளான இஷா அம்பானி அவர்களின் கல்யாணத்தை கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து, உலகில் மிக சிறந்த கல்யாண ஆடை என்று உருவாக்கி உலக அளவில் புகழ்பெற்றது. இஷா அம்பானி அவர்கள் கல்யாணத்துக்கு அணிந்த ஆடையின் விலை 90 கோடியாகும். அந்த ஆடையில் சுத்தமான தங்கப்பட்டு, மிக விலை உயர்ந்த முத்துக்கள், பவளங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டது. முகேஷ் அம்பானி அவர்கள் தற்போது இந்தியாவிலே முதல் பணக்காரர் ஆவர். இவர் சொத்து மதிப்பு 116.9 பில்லியன் டாலராகும், இந்திய மதிப்பில் 9.68 லட்சம் கோடி ஆகும்.

   

இவர் வைத்திருக்கும் விலை உயர்ந்த ப்ராப்பர்ட்டீஸ் ; மும்பையில் அமைந்திருக்கும் இவர் வீடான “ANTILIA” என்ற வீட்டின் விலை 15 ஆயிரம் கோடியாகவும். இவர் மூன்று தனிப்பட்ட விமானங்கள் வைத்துள்ளார், பின் பிசினஸ் செட் 2( business set 2), போல் கன் 900 எக்ஸ( ball gun 900 ex) மற்றும் ஏர்பஸ் ஏ 319 airbus a319) ஆகும். இவர் தனிப்பட்ட லக்சரி கார்களான பிஎம்டபிள்யூ (BMW 760 LI), பென்ஸ் (M Benz 660 squad), லம்போகினி( Lamborghini urus), மஸராட்டி( Maserati Levante), ரோல்ஸ் ராய்ஸ்( Phantom, collinian), என்று மொத்தம் கிட்டத்தட்ட 12 சொகுசு கார்கள் வைத்துள்ளார். இவரிடம் சொந்தமான சூப்பர் யாச் (சூப்பர் yatch) என்ற 15,000 கோடி மதிப்பில் உள்ள கப்பல் வைத்துள்ளார்.

   

மென்டரில் ஓரியண்டல் ஹோட்டல் 2,234 கோடி மதிப்பு மிக்க ஹோட்டலும், துபாயில் 1,850 கோடி மதிப்புள்ள பால் ஜமீரா என்ற வில்லா ஒன்று வைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 18 reliance சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நடத்தி வருகிறார். ரிலையன்ஸ் ஸ்கூல், மார்ட், ஃபவுண்டேஷன், ஆட்டோ மொபைல் இண்டஸ்ட்ரி, ஜியோ இன்டஸ்ட்ரி, ஜியோ இன்ஃபர்மேஷன் சர்வீஸ், ஜியோ பினான்சியல் சர்வீஸ் என்று 18க்கும் மேற்பட்ட கம்பெனிகளை வைத்து இந்தியாவிலேயே முதல் பணக்காரர் என்று பெயரை பெற்றுள்ளார்.