அம்மாவை போல அவ்ளோ அழகு… தங்களது செல்ல மகனின் முகத்தை வெளிஉலகிற்கு முதன்முறையாக காட்டிய அட்லீ- பிரியா தம்பதி…

By Begam on பங்குனி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர்  இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

   

இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் அட்லீ. அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக அட்லீ பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மீர் என பெயர் வைத்தனர். தங்களது குழந்தையின் முகத்தை சோசியல் மீடியாவில் மறைத்து வந்த இவர்கள், ஆனந்த் அம்பானி வீட்டின் திருமண விழாவில் தங்களது செல்ல மகன் மீர் முகத்தை வெளிப்படையாக காட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)