Connect with us

CINEMA

‘திமிரு’ பட வில்லி நடிகை ஷ்ரேயா ரெட்டியின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரரா..? வெளியான ஷாக்கிங் தகவல்…

நடிகர் விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான ‘திமிரு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்ற இவரது டயலாக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்றுவரை காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

   

இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமின் ‘சாமுராய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து  திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக் கொண்டு திரையுலகை  விட்டு விலகிய இவர்  தற்பொழுது திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இறுதியாக நடிகை ஸ்ரேயா ரெட்டி சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் டோலிவுட்டில் கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.  சலார் திரைப்படத்தில் இவரது தோற்றம் ‘பாகுபலி’ ரம்யா கிருஷ்ணனின் சிவகாமியுடன் ஒத்து போவது போல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஷ்ரேயா ரெட்டியின் தந்தையை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் பெயர் பரத் ரெட்டி. 1978 முதல் 1981 க்கு இடையில் கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் பல சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் தினேஷ் கார்த்திக் மற்றும்  லட்சுமிபதி பாலாஜி இருவருக்கும் பரத் ரெட்டி பயிற்சி அளித்துள்ளார். நடிகை ஷ்ரேயா ரெட்டி  தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top