ஜோதிகாவுக்கு நக்மாவை தாண்டி இன்னொரு அக்கா உள்ளாரா…? அவரும் ஒரு நடிகை தான்…

By Begam on மாசி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Jyothika

   

தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய பல  மொழிகளிலும் ஜோதிகாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் கடந்த 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

   

 

 

இதை தொடர்ந்து கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சமீபத்தில் இவர் மலையாள பிரபல நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில்  பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகாவுக்கு நக்மா என்ற சகோதரி இருப்பது நம்மில் பலருக்கும் தெரியும். நடிகை நக்மாவும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்துவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.

ஆனால் உங்களுக்கு தெரியாத மற்றொரு தகவல் உள்ளது. நடிகை நக்மா ஜோதிகாவின் கூட பிறந்த சகோதரி அல்ல அவர் ஒன்றுவிட்ட சகோதரியாம். இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஜோதிகாவுடன் கூட பிறந்த சகோதரி இருக்கிறாராம், இவர் பெயர் ரோஷினி. இவர் தமிழில் சிஷ்யா மற்றும் துள்ளித்திரிந்த காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு அப்படியே ஜோதிகாவை ஜெராக்ஸ் எடுத்தது போல் அதே ஜாடையில் இருப்பார். இந்த நிலையில் ஜோதிகாவின் சகோதரி ரோஷினியின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.