INfobells

அம்மாடியோவ்..! யூடியூபில் 15 கோடி SUBSCRIBERS.. பச்ச குழந்தைகளுக்கு பாடம் சொல்லியே கோடீஸ்வரரான தமிழச்சி..

By admin on மாசி 17, 2024

Spread the love

உங்கள் வீட்டில் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருக்கின்றனரா.. அப்போது இவரைத் தெரியாவிட்டாலும், இவர் யூடியூப் சேலை உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். இன்று இந்தியாவிலேயே அதிக பட்சமாக கிட்டத்தட்ட 8 மொழிகளில் 150 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் கொண்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சேனலாகத் திகழ்கிறது INFOBELLS. இன்பர்மேஷன் பெல்ஸ் என்பதன் சுருக்கமே INFOBELLS என்றானது.

இன்று எந்தக் குழந்தையின் கையில் மொபைலைக் கொடுத்தாலும் கரடிமாமா பாடல், உருளைக் கிழங்கு பாடல், கண்மணி பாடல், யானைப் பாடல் போன்ற பாடல்கள் அவர்களின் பிளே லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும். இவ்வாறு குழந்தைகளின் அம்சமாக ஒன்றிப் போன இன்போ பெல்ஸ் நிறுவனத்தினை ஆரம்பித்தவர் கோவையைச் சேர்ந்த ஒரு தமிழச்சி தான்.

   
Infobells

#image_title

   

கடந்த 2003ம் ஆண்டு எளிமையான எடுடெயிண்மெண்ட்(Edutainment) ஸ்டார்ட் அப்பாக நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ‘இன்ஃபோபெல்ஸ் சேனல் இன்று, 150 மில்லியன் சப்ஸ்கிரைபர்களோடு இந்தியாவிலேயே முக்கியமான எடுடெயிண்ட்மெண்ட் சேனல்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது.

 

குரூப் டான்ஸராக 75 ரூபாய் வாங்கி பாலிவுட் நடிகர்.. இன்று மாதம் 16 கோடி.. யார் தெரியுமா?..

ஜெயலட்சுமி குபேர் என்ற அந்தப் பெண்மணி கோவையில் கல்லூரியில் படிக்கும் போதே அப்போது பிரபலமாக இருந்த 2D, 3D போன்ற அனிமேஷன் தொழில்நுட்பங்களை ஆர்வத்துடன் பயின்று இன்று INFOBELLS நிறுவனத்தினை தனது கணவருடன் இணைந்து உருவாக்கி அதன் இணை நிறுவனராகத் திகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் இவர்களது படைப்புக்கள் சிடி வடிவிலும், புத்தக வடிவிலும் வந்து கொண்டிருந்தது.

Infobells 3

#image_title

காலமாற்றம் ஏற்பட இவர்கள் புதிதாக 2011-ல் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கி யூடியூப் சேனலையும் தொடங்கி தொடர்ந்து தங்களது படைப்பினை அதில் பதிவேற்றம் செய்ய நல்ல பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து புத்தக வடிவிலும், சிடிக்களிலும் வந்த பாடல்களை அனிமேஷனாக மாற்றி அதனுடன் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் வண்ணங்கள், காட்சிகள், எளிய வார்த்தைகளுடன் குழந்தைப் பாடல்களை இயற்ற இன்று இந்தியாவின் நம்.1 குட்டீஸ் சேனலாக உருவெடுத்திருக்கிறது INFOBELLS.

INFOBELLS தற்போது தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 8 மொழிகளில் குழந்தைகளுக்கான படைப்புகளை தயாரித்து வருகின்றனர். பெங்களூருவில் இயங்கி வரும் இவர்களது அலுவலகத்தில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.