‘படத்துக்கு OK பண்ணிட்டு வேற ஆள மாத்திடுவாரு’… வடிவேலு பற்றி பிரபல காமெடி நடிகர் கூறிய பகீர் தகவல்…

By Begam on மாசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். பல வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு , நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இறுதிப்படமான மாமன்னன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

   

இதைத்தொடர்ந்து தற்பொழுது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் வடிவேலு குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் அவரது கணவர் கணேஷும் வடிவேலு பற்றி பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது .

   

 

அதில் ஆர்த்தி கூறும் பொழுது ‘ அவரோட நடிக்கும் போது நம்ம நல்லா  நடிச்சுட்டா , அந்த சீன் முடிந்ததும் செல்லம் செமையா இருந்துச்சு. நல்லா பண்ணிட்ட’என்று சொல்லிவிட்டு, ‘ அந்த சீன் படத்திலேயே இல்லாமல் தூக்கிடுவார். இது தான் தான் வடிவேலுவின் கேரக்டர்’ என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவரது கணவர் கணேஷ், ‘ ஒரு படத்திற்காக மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்தாராம். ஆனால் சிறிது நேரத்தில் அங்கு டைரக்டர் வந்து உங்க கேரக்டருக்கு வடிவேலு வேறொரு நடிகரை கூப்பிட்டு வந்துட்டாரு.

அவரை தான் நடிக்க வைக்க போறோம் . இந்தாங்க உங்க பய்மேன்ட். நாம அடுத்த படத்துல பாக்கலாம். என சொல்ல, அவர் சென்று வடிவேலுவிடம் இதைப்பற்றி கேட்டுள்ளார். அதற்கு வடிவேலு ‘ இந்த கேரக்டர் எல்லாம் உங்க லெவலே இல்ல. உங்களுக்கு நான் வேற கேரக்டர் வைச்சிருக்கேன்’ என்று கூறியதாக இந்த பேட்டியில் மன குமுறல்களை கொட்டியுள்ளனர் இந்த ஜோடி . இதோ அந்த வீடியோ…