Connect with us

CINEMA

டப்பிங்கில் சொதப்பிய சில தமிழ் படங்கள்… இந்தியன் படத்தில் கமலுக்கு பதிலாக வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா..?

சினிமாவில், பெரும்பாலும் தமிழ் பேசத் தெரியாத அல்லது அவர்களது ஒரிஜினல் குரல் அவர்களது பாவனைகளுக்கு ஒத்து வராமல் இருக்கும் போது, டப்பிங் கலைஞர்களை வைத்து அவர்களுக்கு பதில் குரல் கொடுக்க வைப்பர். இதற்கு எடுத்துக்காட்டாய் மைக் மோகனைக் கூறலாம். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்த மோகனின் சினிமாவில் பேசும் குரல், அவரது சொந்த குரலே இல்லை. நடிகரும், டப்பிங் கலைஞருமான எஸ்.என்.சுரேந்தர் தான் பெரும்பாலும் மோகனுக்கு டப்பிங் கொடுப்பார்.

#image_title

   

மோகன் நடித்து வெள்ளி விழா கண்ட பல படங்களுக்கு இவர் தான் டப்பிங் கொடுத்திருப்பார். ஒரிஜினலாக மோகனின் குரல் இப்படித் தான் இருக்குமோ என்ற சந்தேகம் வரும் அளவு, இவரது குரல் அவருக்கு பொருந்தும். அதேப் போல தான் தீபா வெங்கட் குரலும் நயன் தாராவுக்கு பொருந்திப் போகும். நயன் தாராவின் பல படங்களுக்கு தீபா வெங்கட் தான் குரல் கொடுத்திருப்பார். இவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில், அவரது லேப்டேப்பை ஓபன் செய்வதற்கு அவரது குரல் போன்றே மெமிக்கிரி செய்பவர்களை வைத்து முயற்சி செய்வர். அப்படி தமிழ் சினிமாவில் சில படங்களில் டப்பிங்கில் செய்த தவற்றை, டப்பிங் கலைஞர்கள் அல்லது பிற கலைஞர்களை வைத்து சரி செய்ததும் உண்டு. உதாரணத்திற்கு இந்தியன் படத்தில், ஒரு காட்சியில், கவுண்டமனியை ஒட்டகம் கடித்து விடும், அந்த இடத்தில் கமல் டப்பிங்கில் விட்ட, இரண்டு வார்த்தையை மட்டும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசியிருப்பார். ஆனால் நாம் அதனை உன்னிப்பாக கவனித்திருக்க மாட்டோம்.

#image_title

அதேப் போல, கமல்ஹாசனின் டிக் டிக் டிக் படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டு கமல் வெளியூர் சென்றுள்ளார். தவறுதலாக இரண்டு இடங்களில் கமல் பேச வேண்டிய காட்சிகளை எடுக்காமல் விட்டு இருப்பர். அந்த இடங்களை சித்ரா லட்சுமணனை வைத்து பேச வைத்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா. பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் தான் பாடுவார். படத்தின் இடையில் அவர் சிறு வரி பாட வேண்டும் என்றாலும் எஸ்.பி.பியின் குரல் தான். ஆனால் எந்திரன் படத்தில் ரோபா ரஜினிகாந்திற்காக பாடியிருப்பார் பாடகர் மனோ.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top