2011 உலகக்கோப்பையின் போது தோனி பயன்படுத்திய இந்த REEBOK BAT .. எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது தெரியுமா..?

By Archana on மாசி 6, 2024

Spread the love

வரலாற்றில் இடம் பெறும் பல விஷயங்களின் நினைவாக பல பொருட்கள் ஒன்று அருங்காட்சியகத்தில் இருக்கும், அல்லது குறிப்பிட்ட நபர்கள் அதனை வாங்கி தங்களிடம் வைத்துக் கொள்வர். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாதனை படைத்தவர்களின் பல பொருட்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது. அப்படி கிரிக்கெட்டில் தோனி ஒரு சிக்ஸ் அடித்த பேட்டின் விலை 13 கோடி ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது. எதற்காக அந்த பேட்டிற்கு அந்த மதிப்பு என்பதை பார்க்கலாம்.

#image_title

2011-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலக்கோப்பை போட்டியில் தோனி சிக்ஸ் அடித்த அந்த பேட்.. அந்தப் போட்டியை யாராலும் மறக்கவே முடியாது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியை, நேரிலும், தொலைக்காட்சிகளிலும் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்கள் உன்னிப்புடன் பார்த்தனர்.

   
   

#image_title

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் இலங்கை அணி, 6 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சச்சின், சேவாக் என சீனியர் பிளேயர்கள் உள்ளார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தனர்.

6.1 ஓவரில் 31 ரன்களுக்கு இரு விக்கெடுகளை இழந்து நின்றது இந்திய அணி. இலங்கை தரப்பில் ஆராவாரம், இந்தியா தரப்பில் மிகப்பெரிய சோகம். அதனை தொடர்ந்து களமிறங்கிய கம்பீர் -கோலி இணை நிதானமாக ஆடினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாக, இறுதியாக யுவராஜ்க்கு பார்ட்ணர்ஷிப்பாக அமைந்தார் தோனி. 11 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில், தோனி தனக்கே உரித்தான ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்து அசத்தினார். 1983-ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஒரு சிக்சர் மூலம் மீண்டும் உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.

#image_title

அப்படி தோனி சிக்சர் அடித்த அந்த பேட், ஏலத்தில் விடப்பட்டது. அதனை 2011-ம் ஆண்டு 1,00,000 பவுண்டுகள் கொடுத்து வாங்கினார் ஆர்.கே.குளோபல் குழு தலைமை நிர்வாக அதிகாரி அமித் பாக்சந்த்கா. இந்திய மதிப்பில் 1கோடி ரூபாய். அந்த பேட்டின் தற்போதைய மதிப்பு 13 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் லண்டன் சந்தையில் விட்ட ஏலத்தில் 1.4மில்லியன் பவுண்டுகளுக்கு விலை கேட்கப்பட்டதாம். ஆனால் அமித் அந்த பேட்டை 50 கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்கப் போவதில்லை என கூறியுள்ளார். ஒன்று அதை தோனியே வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் தங்களுடைய பாதுகாப்பில் அந்த பேட் இருக்கும் என கூறியுள்ளார்.