அரசியலுக்கு கிளம்பிய விஜயின் இடத்தை நிரப்ப தயாராகும் 5 நடிகர்கள்.. எல்லாத்துக்கும் தகுதியாக இருக்கும் விஜயின் நண்பன்..

By Archana on பிப்ரவரி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என அனைவரும் கூறி வந்த நிலையில் இன்று அவரும் சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு செல்லப் போவதாக அறிவித்துள்ளார். கோட் படத்தை தொடர்ந்து அடுத்து கையெழுத்திட்டுள்ள படத்தையும் முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்திலும், வசூல் மன்னனாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வரும் விஜய், இந்த நேரத்தில் நடிப்பை விட்டு விலகுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவரது அந்த காலி இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அவரது இடத்தை பிடிக்க தயாராகும் 5 நடிகர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

   

1. சூர்யா :

   

மாஸ் படங்களை தவிர்த்து சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் கொண்ட படமாக நடித்து வருகிறார் சூர்யா. அவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக கங்குவா படத்தில் நடித்து வந்த சூர்யா, அடுத்தடுத்து கைவசம் படங்களை கையில் வைத்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவதால், இனி வசூல் மன்னனாக அஜித்திற்கு அடுத்தப்படியாக சூர்யா இருப்பார் எனக் கூறப்படுகிறது.

 

#image_title

2. விஜய்சேதுபதி :

என்னதான் எதார்த்தமான நடிகர் என்றாலும், இந்தக் கதை நமக்கு ஒர்க்கவுட் ஆகுமா? ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருக்குமா? என்றெல்லாம் எண்ணாமல் வரும் படங்களுக்கு எல்லாம் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோ என்பதை தாண்டி, வில்லன் மற்றும் இரண்டு மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார். விஜய்யின் இடம் தற்போது காலியாகவுள்ள நிலையில், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னிணையில் வர விஜய் சேதுபதிக்கு வாய்ப்புள்ளது.

3. தனுஷ் :

தனுஷூம் ஆக்சன் படங்களை தாண்டி, சாதி பாகுபாடுகளை களையும் படங்களை அதிகளவு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விஜய் அளவுக்கு இவரது மார்க்கெட் இன்னும் உயரவில்லை என்றாலும் கூட, விஜய் ரேசில் இருந்து விலகியதால், ஒரு படி முன்னே சென்றிருக்கிறார்.

#image_title

4. சிம்பு :

இவர் பிறந்தது முதல் சினிமாவில் தான் இருந்து வளர்ந்து வருகிறார் எனலாம். குழந்தையில் இருந்தே நடித்து வரும் சிம்புவுக்கு இடையே போதாத காலம் வந்ததால், பல சர்ச்சைகளில் சிக்கி, உடல் பருமன் அதிகரித்து, படங்கள் இன்றி இருந்தார். பின்பு ஒரு அதிரடியான டிரான்ஸ்ஃபர்மேசன் கொடுத்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். விஜய்யின் இடத்தை பிடிப்பதில், போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர், இனி போட்டியின்றி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வசூலில் கலக்க காத்திருக்கிறார்.

5. சிவகார்த்திகேயன் :

தமிழ் சினிமாவில் விஜய்யின் இடத்தை பிடிக்க சில காலங்களாக சிவகார்த்திகேயன் போட்டியிட்டு வருவதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் இவருக்கும் சரியான கதைகள் அமையாததால், ஒரு வெற்றி, ஒரு தோல்வி என ஏற்ற இறக்கத்துடன் படம் நடித்து வருகிறார். இப்போது விஜய் இல்லாத அந்த இடத்தை நிரப்ப தயாராகி வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

#image_title