Connect with us

TRENDING

BB-ஐ விட்டு வெளியே வந்தும் சமாதானம் ஆகலையா.. ரியாலிட்டி ஷோவில் தினேஷுடன் ஏற்பட்ட மோதலால்.. பாதியிலே கிளம்பிய விசித்ரா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் பேசப்படும் ஷோவாக பிக் பாஸ் சீசன் 7 இருந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து அண்டாகாகசம் 2 ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் விளையாட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான விசித்ரா, தினேஷ் என பலர் கெஸ்டாக வந்திருக்கின்றனர்.

   

இந்த ஷோவில் இரண்டு டீம்களாக பிரிந்து அங்கு வைக்கப்படும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது எந்த டீம் அவர்களுக்கே பரிசு வழங்கப்படும். இதில் விசித்ராவுக்கு எதிர் டீமாக தினேஷ் கலந்து கொள்வார் என ஏற்கனவே விசித்ராவிடம் ஷோ  உறுப்பினர்கள் சொல்லியிருந்த நிலையில் விசித்ரா தினேஷ் என்னோட டீம்ல் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகிறது.

அவரை எவ்வளவோ சமாதானம் செய்த நிலையிலும் பலன் இல்லை என்று ஷோ தயாரிக்கும் டீம் கூறியிருந்தனர். இது பற்றி தினேஷிடம் கேட்டபோது தினேஷ் மறுத்துவிட்டார்; ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மிகவும் தவறாக பேசியதால் அவருடன் இணைந்து எனக்கு இந்த சோவில் விளையாட விருப்பமில்லை என்று தெளிவாக தெரிவித்தார்.

விசித்ராவுடன் இணைந்து விளையாட தினேஷ் மறுத்த நிலையில் விசித்ரா சோ தயாரிக்கும் டீமிடம் சண்டை போட்டு கிளம்பி சென்றுவிட்டார். இது fun ஷோ; இதில் டீம் என்பது முக்கியமில்லை சும்மா மக்களின் பொழுது போக்கிற்காக நடைபெறுகிறது என்று எவ்வளவோ டீம் உறுப்பினர்கள் கூறிய போதிலும் அதை ஏற்க மறுத்தார் விசித்ரா.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in TRENDING

To Top