AK63 அப்டேட்.. திருமணம் ஆகாத 53 வயது நடிகையுடன் கைகோர்க்கும் தல அஜித்.. 24 வருடங்களுக்கு பிறகு சேரும் Favorite ஜோடி..

By Mahalakshmi on தை 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராகவும் மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக மாஸ் காட்டுபவர் தல அஜித்; ரசிகர் மன்றமே இல்லாமல் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே ஹீரோ அஜித். இவர் நடிப்பால் இளைஞர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகராக வலம் வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

   

நடிகர் அஜித்  தமிழ் சினிமாவில் “அமராவதி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து நடிகர் அஜித் இந்த அளவிற்கு தனது நடிப்பால் மட்டுமே முன்னேறி இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் ரேஸ்களில் கலந்துகொண்டு அதிலும் வெற்றி பெற்றுள்ளார்.

   

 

நடிகர் அஜித் அமர்க்களம்  திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ஷாலினி மீது காதல் கொண்டு அவரை திருமணமும்  செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகயுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் துபாயில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தல 63 திரைப்படத்தை  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக 54 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தல அஜித் அவர்களுடன் ஜோடியாக நடிகை தபு “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி 24 ஆண்டுகள் கழித்து இணைய உள்ளதாக   சுவாரசியமான தகவல் கசிந்துள்ளது. இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு பெற்று வருகிறது.