என்னது நடிகை அனுபமாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா..? கழுத்தில் தாலியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்..

By Mahalakshmi

Published on:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

   

2015-ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான “பிரேமம்” படத்தின்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தில் நடிகர் நிவின் பாலியின் பள்ளி பருவ காதலியாக நடித்து இளைஞர்களின்  மனதை கொள்ளை அடித்தார் அனுபமா. இதையடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” படத்தில் நடித்ததன்  மூலம் தமிழ் சினிமாவில்  எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அமையாத காரணத்தினால்  தெலுங்கு திரையுலகிற்கு சென்றார் அனுபமா. அங்கு அவர்  கிளாமர் ரோல்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் உஷாரான அனுபமா, கவர்ச்சியாக நடிக்க அதிக சம்பளம், குடும்ப பாங்கில் நடிக்க   தனி சம்பளம் என  பிக்ஸ்ட்  ரேட் வைத்தார்.

நடிகை அனுபமா நடிப்பில் தற்போது தமிழில் சைரன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுபமா. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்தில் தாலியோடு புதுமணப்பெண் போல் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாக நினைத்து வாழ்த்து கூறினார்கள். சிலரோ அனுபமா ரகசிய திருமணம் செய்துகொண்டாரா என்ற  கேள்வி எழுப்பினர். ஆனால் உண்மை என்னவென்றால் அது சைரன் படத்துக்காக அவர் போட்ட கெட் அப். சைரன் படத்தில் அவருக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணம் நடைபெறும் காட்சியை படமாக்கிய பின்னர் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இது.  சைரன் படத்தில் இருந்து நேற்று வரை என்கிற பாடல் வெளியாகி உள்ளது; அந்த பாடலை புரமோட் செய்யும் விதமாக தான் அனுபமா பரமேஸ்வரன் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பீதியடைய செய்துள்ளார் அனுபமா.

author avatar
Mahalakshmi