அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு படையெடுத்த பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா..?

By Mahalakshmi on தை 22, 2024

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா  மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உலகமே உற்றுநோக்கிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாட்டின் முக்கிய பிரமுகர்கள், கோலிவுட் முதல் பாலிவுட் திரைப் பிரபலங்கள் படையெடுத்து  விழாவில்  கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர்.

ayodhya temple

   

அயோத்தி – ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்‌ஷேத்ரா சார்பில் சென்னையில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், விழாக்குழுவின் அழைப்பை ஏற்று அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து  புறப்பட்டார்.

   

 

பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்த ஜாய் அவார்டஸ் ஆலியா பட் ரன்வீர் கபூர் ஆகியோர் மும்பைக்கு வந்துள்ளார்கள்.  மேலும் திரை பிரபலங்களான சிரஞ்சீவி, ராம்சரண், ரோகித் செட்டி, கத்ரீனா கைஃப், விக்கி கவுசல், அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், மாதுரி தீக்ஷித், ஸ்ரீராம் மாதவனே, பவன் கல்யாண், ரன் தீப், அனுபம் கெர், விவேக் ஓபராய், மதூர் பண்டார்கர்,  தீபிகா சிக்லியா, ராகேஷ் பேடி மற்றும் ஹேமா மாலினி பிரபலங்கள் பங்கேற்க உள்ளார்கள்.

இதுதவிர மேலும் சில தமிழ் திரையுலக பிரபலங்களும் அயோத்திக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் பெற்று   கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள திரைபிரபலங்கள் படையெடுத்து வந்துள்ளார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள காத்திருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியாக இருப்பதாக திரைபிரபலன்கள் தெரிவித்து வருகின்றார்கள்.