Connect with us

மருமகன் தனுஷ், பேரன்கள், மனைவி என ஒட்டு மொத்த குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கிளம்பிய ரஜினிகாந்த்..

TRENDING

மருமகன் தனுஷ், பேரன்கள், மனைவி என ஒட்டு மொத்த குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கிளம்பிய ரஜினிகாந்த்..

புதிதாக அயோத்தி ராமர் கோவில் கட்டிய நிலையில் நீண்ட நாள் கழித்து கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் கிடைத்த நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அழைப்பிதழ்கள் கிடைக்கப்பெற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினருடன் அயோத்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய ஏர்போட்டில் இருந்து புறப்பட்டார்.

பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலைக்கு சக்தி வழங்கும் பூஜை, சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கிடைத்தன.

   

 

இன்று மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதில் பிரதமர் மோடி ராமர் சிலைக்கு ஆரத்தி உள்ளிட்ட சடங்குகளை செய்வதாக தகவல் வெளியாகின. இந்த விழாவை காண பக்தர்களுக்கு ராமர் கோவிலில் அனுமதி இல்லை. கோவில் நிர்வாகம் மற்றும் உத்தர பிரதேச அரசு சார்பில் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே நேரில் விழாவில் பங்கேற்க முடியும்.

அழைப்பிதழ் கிடைக்காத மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகள் மூலமும், காணொலி காட்சி மூலமும் நேரலையாக  தான் விழாவை காணலாம். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் விழாவையொட்டி 16 மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரேமலதா ரஜினிகாந்த்,  ரஜினிகாந்த் மருமகனான நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த்  பேரக்குழந்தைகள் அனைவரும் தனித்தனியே ஏர்போர்ட்டிற்கு வந்து தனது நுழைவுச்சீட்டை  கண்காணிப்பாளரிடம் கொடுத்து உள்ளே சென்றார்கள்.  இதில் ரஜினிகாந்த் மூத்தமகளான ஐஸ்வர்யா தனுஷ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மகிழ்ச்சியுடன் போவதாக ரஜினிகாந்த் பேட்டியில் கூறினார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top