நடிகர் அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி ஷூட்டிங் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. ஆனால் இடையிடையே தடைபட்டு, தடைபட்டு படப்பிடிப்பு நடப்பதால் இதுவரை 50 சதவீதம் மட்டுமே படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்தாக வேண்டும். ஏனெனில் அதுவரை அஜீத்குமார் கால்ஷீட் தந்திருக்கிறார். அடுத்து, மார்ச் மாதம் துவங்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் அஜீத்குமார் நடிக்கிறார்.

ஆனால் இன்றைய நிலவரப்படி, விடாமுயற்சி ஷூட்டிங் நடத்துவதற்காக கடந்த 12ம் தேதியே படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுவிட்டனர். ஆனால், செட் ஒர்க் அங்கு நடப்பதால், படப்பிடிப்பு நடத்தாமல் அனைவரும் சும்மா இருக்கின்றனர். இதனால் தினமும் பல லட்சம் ரூபாய் படத்தை தயாரிக்கும் லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு செலவாகி வருகிறது. படப்பிடிப்பு நடந்தால் ஆகும் செலவை விட, படக்குழுவை சும்மா உட்கார வைத்து தினமும் பல லட்சம் ரூபாய்களை சம்பளமாக தரும் நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் நொந்து போயுள்ளது.

இதற்கிடையே சென்னையில், அஜீத்குமார் அடுத்து நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அடுத்த படத்துக்கான பூஜை சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆனால் இது படத்துவக்க விழாவுக்கான பூஜை, படத்தின் ஆபிஸ் துவக்க விழா பூஜை என்று சொல்லப்படுகிறது.

என்றாலும், விடாமுயற்சி படப்பிடிப்பை அங்கு பாதியுள்ள நின்றுள்ள நிலையில், சென்னையில் சைலண்டாக அடுத்த படத்துக்கு அஜீத் பூஜை போட்டுவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார், கலைஞர் 100 விழாவுக்கு வர மாட்டார், ரசிகர்களை சந்திக்க விரும்ப மாட்டார், அதே வேளையில் அவர் நடிக்கும் படம் குறித்த விழா, பூஜை எதுக்கும் அழைக்க மாட்டார் என்ற சர்ச்சையில் இப்போது சிக்கியிருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.
