பிரியங்கா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் மிகச்சிறந்த தொகுப்பாலர்களுள் ஒருவர் பிரியங்கா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஆரம்பத்தில் மா.கா. பா வுடன் சேர்த்து சில நிகழ்சிகளை தொகுத்து வந்தார். பின்னர் அவர் தனியாக ஸ்டார்ட் மியுசிக் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் அவர் பிரவின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் விஜய் டிவியில் பணிபுரிபராகவும், இவரால் தான் பிரியங்கா இந்த தொலைக்காட்சிக்கு வரவளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி சிறிது காலமே இவர்கள் ஒன்றாக இருந்தார்கள். விஜய் டிவியில் பிரியங்காவின் வளர்ச்சி அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை எந்த அளவுக்கு ரசிகர்களையும், மக்களையும், நிகழ்ச்சியின் போட்டியாளர்களையும் மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு அவர் நகைச்சுவையாக எடுத்துச்செல்வார்.
ஒரு சிறந்த தொகுப்பாளராக இருக்க காரணம் அவரை மற்றவர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அதனையும் காமெடியாக எடுத்துச்செல்லும் இயல்பு பிரியங்காவிடம் இருந்தது தான். இந்நிலையில் இந்த வளர்ச்சியே இவர் தன் கணவன் பிரவினை பிரிய காரணமாக அமைந்தது. தனது மனைவி இந்த அளவு வளர்ச்சியடைந்தது அவருக்கு பிடிக்காமல் போனதாக பயில்வான் கூறியுள்ளார்.

இவர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட பிரச்சனையை பிக் பாஸ்க்கு முன்னதாகவே ஏற்ப்பட்டதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அவருக்கு தன் மீது ஏற்ப்பட்ட கோபம் சென்றுவிடும் என நினைத்து சீசன் 5 ல் கலந்துகொண்டார். அப்போதும் அவர் கோபம் குறையாததால் அவரை பிரிந்து தனது அம்மாவுடன் வாழ்ந்துவந்தார் பிரியங்கா. தனது கணவர் எப்போது அழைத்தாலும் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இருந்தார். ஆனால் பிரவின் மறுக்கவே பொறுமையை இழந்த பிரியங்கா தற்போது தனக்கும் பிரவினுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என விவாகரத்துக்கு பதிவு செய்துள்ளார் என்று பயில்வான் கூறியுள்ளார்.
