நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பெண் கேட்டு சென்ற ரஜினி.. அதற்கு ஸ்ரீதேவி செய்த ரியாக்சன்..?

By Sumathi

Updated on:

இன்று 70 வயதுகளை கடந்த நிலையில் இருக்கும் ரஜினி, கமல் என பலரும் இளைஞர்களாக இருந்து, அந்த வயதை கடந்து வந்தவர்கள்தான். எனவே, தங்களுக்கு திருமணம் செய்ய வேண்டிய வயதில், அந்த காலகட்டத்தில் நிச்சயம் அதற்கான ஒரு தேடுதல் அவர்களது மனதிலும் நிச்சயம் இருந்திருக்கும். ஒன்றாக பணிபுரியும் இடங்களில், அலுவலகங்களில், தொழில்கூடங்களில் காதல்வயப்பட்டு பலரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இப்போதும் சகஜமாக நடக்கிறது. அதுபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்விலும் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.

   

போக்கிரி ராஜா, அடுத்தவாரிசு, நான் அடிமை இல்லை உள்ளிட்ட பல படங்களில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதைய டாப் நடிகைகளில் மிக மிக அழகானவராக இருந்தவர் ஸ்ரீதேவிதான். ரஜினி மற்றும் கமலுக்கு அதிக படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. அப்போது, ஸ்ரீதேவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவரை பெண் கேட்டு மிக நம்பிக்கையான ஒரு நபரை, ஸ்ரீதேவியின் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார் ரஜினிகாந்த். அப்போது அந்த வீட்டில் ஸ்ரீதேவியின் அம்மா இருந்துள்ளார். அவரிடம் விஷயம் கூறப்பட்டுள்ளது.

அப்போது, ஸ்ரீதேவி வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். இன்னும் அவர் நிறைய சினிமா உலகில் சாதிக்க வேண்டியது உள்ளது. அதனால், இப்போதைக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணமில்லை. அதுவும் ரஜினியும் வளர்ந்துவரும் நடிகராக இருப்பதால், இப்போதைக்கு இந்த திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர். இதுபற்றி தெரிய வந்ததும், ரஜினி பெரியதாக அதற்காக வருத்தப்படவில்லை.

அதே போல், ஸ்ரீதேவியும் ரஜினி இப்படி கேட்டது குறித்து எந்த ரியாக்சனும் காட்டாமல், எப்போதும் போலவே இருந்துள்ளார். பொதுவாகவே அந்த காலகட்டத்தில் இதுபோல் பிரபல நடிகர், நடிகையர் இப்படி பெண் கேட்பது வழக்கமாக நடந்துள்ளது. அதில் ஒன்றாக தான் ஸ்ரீதேவியை, ரஜினி தனக்கு பெண் கேட்டதும் சகஜமான ஒன்றாக பார்க்கப்பட்டு, அது பெரிய விவகாரமின்றி முடிந்துள்ளது.

author avatar
Sumathi