50 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை சித்தாரா.. இது தான் காரணமா..?

By admin on தை 17, 2024

Spread the love

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. இவர் நடித்த புது வசந்தம்  படத்தை யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் விக்ரமனின் முதல் படமான புதுவசந்தம் படத்திலேயே வலுவான கேரக்டரில் நடித்து ஹிட் கொடுத்தார். நான்கு ஆண்களுடன் வாழும் ஒரு பெண் நட்பாக பழகுவதை காதலர் சுரேஷ் தவறாகப் புரிந்து கொண்டு அவரை ஒதுக்கும் போது தன் இறுதியில் மீண்டும் நண்பர்களே போதும் என்ற முடிவுக்கு வருவது போல் அமைந்த இவரது கதாபாத்திரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

#image_title

மேலும் சித்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நிலையான ஓர் இடத்தையும் கொடுத்தது. இப்படத்தின் பாடல்கள், கதை, நடிப்பு என அனைத்திலும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது நடிகை சித்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சித்தாரா.

   
   
Chitara 1

#image_title

 

நடனக்குழுவில் ஆடிய பெண்ணை தனக்கு ஜோடியாக்கி வீடு வாங்கி கொடுத்தார் – நடிகர் கவுண்டமணி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்

அத்தோடு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புரியாத புதிர் என்று பல திரைப்படங்களிலும் அந்த நேரத்தில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் பெண் பார்க்கும்போது கூட நடிகை சித்தாரா மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னவர்களும் ஏராளம். இந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது ரீ எண்ட்ரி கொடுத்து அக்கா, அம்மா, என்று பல கேரக்டரில் இப்போ வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தற்போது 50 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார்.

Chitara 2

#image_title

அதுமட்டுமல்லாமல் நடிகை சித்தாரா ஆரம்ப காலகட்டத்திலேயே தனக்கு கவர்ச்சியாக நடிப்பது வேண்டாம் என்று மறுத்து ஹோமிலியாகவே தொடர்ச்சியாக நடித்து வந்ததாலே இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இவருக்கு கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது அதிக பக்தி வந்திருக்கிறது. அதனாலேயே இவரும் ஒரு பெண் சாமியாராக மாறிவிட்டதாக சித்தாரா கூறியிருக்கிறார். இதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினாலும் அந்த காலத்தில் இவர் ஒருவரை காதலித்ததாகவும் அது கை கூடததால் தான் திருமணம் வேண்டாம் என ஒதுங்கி தனியாக வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

#image_title