Connect with us

CINEMA

எங்கப்பா நம்ம தளபதி மீசையை காணோம்..? ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்… வைரலாகும் நியூ லுக் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்க உள்ளார்.

   

அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளார். அப்பா  மற்றும் மகனாக இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலே ஏற்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘ தளபதி 68’ படத்தின் தலைப்பு   G.O.A.T = Greatest Of All Time என்றும், First லுக்குடன் வெளிவந்து இணையத்தில் படுவைரலானது.

இதைத்தொடர்ந்து அவ்வப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீசை இல்லாமல் இருக்கும் வீடியோவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ தளபதி மீசை இல்லாம இருக்காரே..? ஒருவேளை வில்லன் கேரக்டரா இருக்குமோ..?’ என்று கூறி இந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top