இயக்குநர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். மிகச்சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தந்து வருகிறார். மணிரத்னம், ஷங்கர் வரிசையில் மற்ற மொழிகளைச் சேர்ந்த நடிகர், நடிகையர் பலரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அப்படி தன் சிறந்த படைப்புகள் மூலம் மற்றவர்களிடம் அறிமுகமானவர். பொல்லாதவன் தான் இவரது முதல் படம். அடுத்து ஆடுகளம், அசுரன், வடசென்னை, விடுதலை என இவரது படங்களே இவரது பெயரை சொல்லும், மிக விரைவில் அஜீத்குமாரை வைத்து வெற்றிமாறன் படம் இயக்கப்போகும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது உடல் நலம், ஆரோக்கியம் குறித்து ஒரு நேர்காணலில் இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது, நான் முதல் படம் பண்ணுகிற வரை பயங்கரமாக ஸ்மோக் பண்ணுவேன். எந்நேரமும் தம் அடித்துக்கொண்டே இருப்பேன். தினமும் 60,70, 80 சிகரட் பிடித்து விடுவேன். சிகரட் பிடிக்கும் நேரங்களில் டீ குடிப்பேன். பிஸ்கட், 2 வாழைப்பழம் இப்படித்தான் சாப்பிடுவேன். சாப்பாடு ஒருவேளை மட்டுமே சாப்பிடுவேன். அப்படித்தான் என் வாழ்க்கை முறை அப்போது இருந்தது.

ஒருவர் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து சிகரட் பிடித்தால், அவரது உடல் அவர் கட்டுப்பாட்டில் இருக்காது. மிகவும் சிரமமாகி விடும் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 14 முதல் சிகரட் பிடிப்பதை விட்டுவிட்டேன். 10 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து சிகரட் பிடிக்காமல் இருந்தால் தான் அவரை புகை பழக்கம் இல்லாதவர் என்று சொல்ல முடியும். நான் என் கண் எதிரே வைத்து சிகரட்டை பார்ப்பேன். ஆனால் புகைப்பதில்லை. நாம் பலவீனமானவர்கள், அது பலமானது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். சிகரட் பழக்கத்தை மறக்க நன்றாக ஒர்க் அவுட் செய்தேன். யோகா செய்தேன்.

#image_title
நல்ல சத்தான உணவு பழக்கத்தை மேற்கொண்டேன். இப்படி சிகரட் பிடிப்பதை விடும்போது தூக்கம் வராது. தூக்கம் இல்லாததால் கோபம் வரும். அதை சுற்றி இருக்கிறவர்கள் புரிந்துக்கொண்டு அதற்கேற்ப நடந்துக்கொள்வது முக்கியம் என கூறியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். மேலும், வாரணம் ஆயிரம் படம் ௨௦௦௮ ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தினை பார்த்துவிட்டு வெளியேவந்தவுடன் சிகரட் பிடிப்பதை நான் நிறுத்திவிட்டேன், என்று கூறினார் இயக்குனர் வெற்றிமாறன்.
