என்னது.. ‘வேட்டையன்’ படத்தில் பகத் பாஸிலுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா..? அப்போ ராணாவுக்கு..?

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

   

அதாவது இந்த படத்தில் நடிக்கும் பகத் பாஸில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராணா வில்லன் வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் பட வில்லன் விநாயகம் அளவிற்கு இல்லாமல் ராணா ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வேட்டையன் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் மற்றும் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Nanthini