படம் முழுக்க அந்த காட்சி தான்.. லோகேஷ் ஏன் இவ்ளோ மோசமான படம் பண்ணனும்.. Fight Club படம் எப்படி இருக்கு..? Movie Review ..

By admin on மார்கழி 15, 2023

Spread the love

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். ஜி ஸ்குவாட் என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு, இன்று திரைக்கு வந்திருக்கும் படம் பைட் கிளப். உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தை அப்பாஸ் ரகமது இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதைப்படி, ஒரு ஏரியாவில் சமூக குற்றங்கள் அதிகமாக நடக்கிறது குறிப்பாக கஞ்சா விற்பனை, கஞ்சா பொட்டலங்கள் விநியோகம், கஞ்சாவை அதிகமாக புகைக்கும் இளைஞர்கள் என ஒரு கஞ்சா கலாசாரம் நிறைந்த பகுதியாக அந்த ஏரியா உள்ளது.

 Fight Club

#image_title

பெஞ்சமின் என்ற ஒருவர், வழிதவறிய போதை இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பாக்ஸிங் கற்றுத் தருகிறார். இதையடுத்து அவரை அரசியல் பிரமுகர் ஒருவரும், அவரும் தம்பியும் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. படத்தின் பாதி வரை இதுதான் படம் என்ற நிலையில், இடைவேளைக்கு பிறகு தொடரும் இரண்டாம் பாதியிலும் இந்த சம்பவங்களை பின்பற்றியே படம் தொடர்கிறது. அதாவது மிளகாய் வத்தல் விற்பது போல கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல், கஞ்சா புகைத்தல் என படம் முழுக்க திரையில் கஞ்சா புகைதான் தெரிகிறது. படத்தில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை. படத்தின் கதையில் எந்த தெளிவும் இல்லை. பழைய இளையராஜா பாடல்களை பல இடங்களில் ஒலிக்க விட்டுள்ளனர்.

   
   
 Fight Club

#image_title

 

படத்தின் கதைக்களம் தூத்துக்குடியா, வடசென்னையா என்பது கூட புரியவில்லை. எப்படி இப்படி ஒரு குழப்பமான படத்தை தயாரிக்க, அதுவும் முதன்முறையாக தனது தயாரிப்பு நிறுவனம் பெயரில் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் முன்வந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. லோகேஷ் கனகராஜ் போதைப்பொருள் என்ற விஷயத்தை மட்டுமே முன்னிறுத்தி இந்த படத்தை தயாரித்திருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் போதைப்பொருள் என்ற விஷயத்தை தான் அவர் இயக்கும் படங்களிலும் வைக்கிறார். அவர் தயாரிக்கிற படத்திலும் அதுவே இருக்கிறது. இவர் தமிழக மக்களை போதைப் பொருள் பயன்படுத்த சொல்லும் மோடிவ்வில் தான் தமிழ் சினிமாவுக்கே வந்தாரா, அல்லது போதைப் பொருள் தவிர இவருக்கு வேறு எதுவுமே கண்ணுக்கு தெரியாதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இனியும் இதுபோன்ற குப்பையான போதை கலாசார படங்கள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக அவசியமில்லை.