2023 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நம்பர் 1 ஹீரோயினாக நடிகை திரிஷா மாறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது கேரியர் இடையில் கொஞ்சம் டல் ஆனது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் ண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்று கூறலாம். இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக கமலுடன் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி நடிகை திரிஷா தனது 21 வருடங்களை திரையுலகில் வெற்றிகரமாக கடந்துள்ளார்.சமீபத்தில் இவர் மன்சூர் அலிகான் பிரச்சனை தொடர்பாக திரிஷா பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#image_title
இந்நிலையில் நடிகை திரிஷா தற்பொழுது 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகை தமன்னா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு இடங்களை த்ரிஷா மற்றும் தமன்னா பிடித்திருக்க நயன்தாரா இந்த இரண்டு இடங்களிலும் இல்லை என்பதால் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.
