தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1975ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவாஜி என்னும் தனது பெயரை ரஜினிகாந்தாக மாற்றி சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து தற்பொழுது இவர் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் மையம் கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் 80களில் வெளியாகிய நான் சிவப்பு மனிதன் ,படிக்காதவன், ஊர்க்காவலன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து 90களில் அதிசய பிறவி, தர்மதுரை, பாட்ஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி , எஜமான், உழைப்பாளி என இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தற்பொழுது வரை ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்பொழுதும் இவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. 48 வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதுகுறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, அதாவது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அவர்களிடம் , 4 வெளிநாட்டு காஸ்ட்லி கார்கள் இருப்பதாகவும் அதன் மதிப்பு மட்டும் 40 கோடி என்றும் கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி அசையா சொத்துக்களின் மதிப்பு 500 கோடி எனவும், அசையும் சொத்துக்களின் இது மதிப்பை சேர்த்தால் 600 கோடி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
