Connect with us

CINEMA

“என்னைக்குமே இவர் தான் சூப்பர் ஸ்டார்”.. குடும்பத்துடன் 73வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய ஸ்டைல் மற்றும் உழைப்பு ஆகியவற்றால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெரும் அளவிற்கு உயர்ந்தார். 70 ஆண்டுகளைக் கடந்தும் ஒருவரால் ஹீரோவாகவே தொடர முடியும் மற்றும் ரசிகர்களை தக்க வைக்க முடியும் என்பதற்கு ரஜினி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இந்திய சினிமாவில் ரஜினி என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு. பவர் இருக்கு ஸ்டைல் இருக்கு.

   

இப்படி பெயருக்கான பல விஷயங்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் வசூல் நாயகனாகவும் டாப்பில் உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தனது நடிப்பை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினி பல நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இப்படி பல புகழுக்குரிய ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரைக் காட்டிலும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாட அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவரது பிறந்த நாளில் பல சிறப்பான செயல்களை அவரது ரசிகர்கள் செய்வதற்கு ஒருபுறம் திட்டமிட்டு வரும் நிலையில் மறுபக்கம் ரஜினி தனது மனைவி, மகள்கள் மற்றும் பேரன்கள் என அனைவரிடமும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top