தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித் அஜர்பைஜான் ஷூட்டிங்கை முடித்து விட்டு, சமீபத்தில் சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பகீரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கப்போகும் தல 64 திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்றால் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த நகைச்சுவை படமாக எடுக்கப் போகிறாராம் ஆதிக். இதுவரை அஜித் நடிக்காத கேரக்டரிலும், சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் அஜித் அவருடைய ஸ்டைலில் காமெடி கொடுத்தால் எப்படி இருக்கும் ? என்று இயக்குனர் ஆதிக் புது முயற்சியை மேற்கொள்ள போகிறாராம். இதைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள்’எங்க ‘ தல ‘ அஜித்துக்கு இதெல்லாம் செட் ஆகுமா?’ என புலம்பி வருகின்றனர்.
