‘அவர் மட்டும் இல்லனா’.. நடிகர் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த் செய்த விஷயம் குறித்து ஓப்பனாக பேசிய முத்துக்காளை..

By admin on மார்கழி 10, 2023

Spread the love

காமெடி நடிகர் முத்துக்காளை, பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். வடிவேலுவை ‘செத்து செத்து விளையாடலாம் வா’ என ஒரு படத்தில் அவர் அழைக்கும் காமெடி மிக பிரபலம். ஒரு நேர்காணலில் நடிகர் முத்துக்காளை கூறியதாவது, விஜயகாந்த் நடித்த தர்மதேவதை பட ஷூட்டிங்கில்தான் அவரை முதன்முறையாக ஏவிஎம் ப்ளோரில் பார்த்தேன். கூலிக்காரன் படம், நான் குடியிருந்த வீட்டருகே நடந்தது. அப்போது 10 ரூபாய் நோட்டில் நான் அவரது ஆட்டோகிராப் கேட்ட போது, அதில் கவர்னர்தான் கையெழுத்து போடணும் என சிரித்தபடி மறுத்துவிட்டார். பிறகு சிறையில் பூத்த சின்னமலர் படத்தில், கூட்டத்தில் ஒருவராக நடித்தேன். பிறகு நெறைஞ்ச மனசு படத்தில் அவருடனே நடித்தேன். என்னை விஜயகாந்த், ஸ்டண்ட் செய்பவர் என்றுதான் மற்றவர்களிடம் பெருமையாக அறிமுகப்படுத்துவார்.

Vijayakanth

#image_title

நடிகர் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் அந்த தி நகர் முழுக்கவே பிளாக் ஆயிடுச்சு. யாருமே நடமாட முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது. நெரிசலில் சிக்கி சிலர் இறந்து போகும் அளவுக்கு மோசமான நிலைமை இருந்தது. அதை போலீசால கூட ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இதை பார்த்துட்டு வேட்டியை மடிச்சுக் கட்டீட்டு கேப்டன் இறங்கி அங்கிருந்தவங்களை எல்லாம் சத்தம் போட்டு விரட்டி, அடிக்கிற மாதிரி விரட்டி கூட்டத்தை எல்லாம் விலக்கி விட்டார். பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள் எல்லாம் வந்திருக்காங்க. அந்த நேரத்துல அவர் மட்டும் அப்படி எறங்கி வேலை செய்யலைன்னா, ரொம்ப சிரமமா போயிருக்கும்.

   
   
Vijayakanth

#image_title

 

போலீஸ்காரங்களால ஒரு கட்டத்துக்கு மேல சரிபண்ண முடியலை. நடிகர்கள் மேல யாராவது கைய வெச்சுட்டாங்கன்னா அதுவேற சிக்கலாயிடும். அந்த எடத்துல இறங்கி நின்னு வரிசைப்படுத்தி, யார் யார எங்கெங்க நிப்பாட்டணும் அங்க கிட்டத்துல யார் யார் போகணும், யார் யார் கிட்டத்துல போகக் கூடாதுன்னு அந்த கண்ட்ரோல் புல்லா அவர் எடுத்துக்கிட்டாரு. ராணுவ கண்ட்ரோல்ல கொண்டு வந்துட்டாங்க, அந்த ஏரியாவை கண்ட்ரோல்ல எடுத்துக்கிட்டாங்க அப்படீன்னு சொல்ற மாதிரி விஜயகாந்த் அந்த கூட்டத்தையே கண்ட்ரோல் பண்ணினார். அதனால்தான் எந்த பிரச்னையும் இல்லாம அந்த விஷயம் முடிஞ்சது என்று கூறியிருக்கிறார் நடிகர் முத்துக்காளை.