ஒரு டாஸ்க்-அ கூட ஒழுங்கா பண்ணல.. அந்த போதைல இருக்கீங்க.. Full Fire-ஓட வந்த கமல்…

By Begam on டிசம்பர் 10, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில்  நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயலால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய எபிசோடில் நிக்சனுக்கு yellow strike கார்டு வழங்கியிருந்தார் கமல். இதைத்தொடர்ந்து மணி, தினேஷ், நிக்சன் மூவரையும் எச்சரித்தார்.  இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

 

இந்த வீட்டுல  என்டர்டெயின்மென்ட் இருக்கா? டாஸ்கையாவது நீங்க சுவாரசியமா செய்றீங்களான்னு பாத்தா..  அதுவும் இல்லை. எந்த ஆசையில நீங்க இங்க வந்தீங்க அப்படிங்கறது இங்க வந்து தடமே மாறிப் போய் வன்ம போதையில் இருந்து விடுபட மாட்டேங்கறீங்க .ஒருத்தரை ஒருத்தர் நீங்களே மதிக்கிறது இல்ல.

இவங்க எதுக்கு உங்களை மதிச்சு இதை பார்க்கணும். முட்டாளுக்கு முட்டை சாப்பிடும் இடத்தில் கூட வன்மன் கக்கும் இந்த இடத்தில் என்டேர்டைன்மெண்ட் எப்படி வரும்? என்று போட்டியாளர்களை வச்சு செய்துள்ளார்.  இதோ அந்த ப்ரோமோ வீடியோ…