ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் வெளியானதில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா, என்ற கேள்வியும் அதுகுறித்த பேச்சும் தமிழக மக்களிடையே பரவலாக இருந்து வந்தது. ஏனெனில் ஜெயலலிதா ஆட்சி குறித்து ரஜினி பேசிய காலகட்டமாகவும் அது இருந்தது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது என்று சொல்லி, கருணாநிதி, ஜிகே மூப்பனாருக்கு அப்போதைய சட்டசபை தேர்தலில் ஆதரவு தந்தார் ரஜினி. இதன்பிறகு பாபா படம் வந்த காலகட்டத்தில் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றறு பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் பாபா படத்தில் கூட அதுசார்ந்த சில காட்சிகளும் வந்திருக்கும். ஆனால் அந்த படமே அவரது அரசியல் வருகைக்கு தடையாக மாறியது என்பதுதான் உண்மை.

Rajinikanth
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் காந்தராஜ் கூறியதாவது,
ரஜினி அரசியலுக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் பாபா படம்தான். பாபா படத்துக்கு அப்போது மிகப்பெரிய விளம்பரம் இருந்தது. ஆடியோ லான்ச் எல்லாம் மிக பிரமாதமாக நடந்தது. ஒரு வார பத்திரிகை பாபா படத்துக்காக ஸ்பெஷல் இஷ்யுவே போட்டது. ஒரு குளிர்பான கம்பெனி பாபா பேர்ல ஸ்பெஷலா குளிர்பானமே போட்டு, பாபா கீ செயின் எல்லாம் போட்டாங்க, அந்தளவுக்கு ஆர்ப்பாட்டமாக இருந்தது. ஆனா அந்த நேரத்துல ரஜினிகாந்த் பேசினது வம்பா மாறிடுச்சு.

Rajinikanth
வீரப்பன் ஒரு அசுரன். அவனை ஒழிச்சாகணும்ன்னு மைசூர்ல போயி ரஜினி பேசிட்டு வந்துட்டாரு. அப்போ ராஜ்குமாரை வீரப்பன் கடத்திட்டு போயிருந்த நேரம். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு, ஒரு தமிழனை பத்தி தப்பா, இஷ்டத்துக்கு பேசலாமா, மன்னிப்பு கேட்கணுமுன்னு சொன்னாரு. ஆனா ரஜினி அதை கண்டுக்காம அலட்சியமா விட்டுட்டாரு. இவங்க என்ன பண்ணிடுவாங்க, பார்த்துக்கலாமுன்னு இருந்துட்டாரு. பாபா படம் ரிலீஸ் ஆகுது. பாட்டாளி மக்கள் கட்சிக்காரங்க தியேட்டர்களுக்குள்ள போயி கலாட்டா பண்ணி படப்பெட்டி எல்லாம் தூக்கிட்டு போயிட்டாங்க, அந்த அளவுக்கு பிரச்னை பெரிசாயிடுச்சு என்று கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ். இந்த பிரச்னை காரணமாக, தனது அரசியல் பிரவேசம், சினிமா வாழ்க்கையை சிதறடித்துவிடும் என்பதை புரிந்துக்கொண்ட ரஜினி, அரசியலுக்கு டாடா காட்டும் முடிவை அப்போதே எடுத்துவிட்டார்.
