கோர தாண்டவம் ஆடிய  மிக்ஜாம் புயல்… சாலையோர மக்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்த நிக்கி கல்ராணி, ஆதி.. மனதை நெகிழச் செய்யும் காணொளி..

By Begam on மார்கழி 9, 2023

Spread the love

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

   

மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. வெள்ளம் முழுமையாக வடியாததால் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

   

 

இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்கள் நிஷா , kpy பாலா , கலா மாஸ்டர் என  வெள்ளத்திலும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

 

View this post on Instagram

 

A post shared by NewsBugz (@newsbugz_official)

 

இந்தநிலையில் நடிகை நிக்கி கல்ராணி மற்றும் அவரது கணவரான நடிகர் ஆதி இருவரும் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)