விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. வாரத்தின் இறுதி நாட்களில் கமலஹாசன் வருவதும் அந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்து போட்டியாளர்களை வறுத்தெடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது .
இதனை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அதேபோல இந்த வாரமும் நிறைய பஞ்சாயத்துகளை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்து விட்டார் கமலஹாசன். முதல் ப்ரோமோவில் ‘போட்டியாளர்கள் தரமாக விளையாடவில்லை’ என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது பிரமோவில் நிக்சனை வறுத்தெடுத்தார்.
மேலும் அவருக்கு yellow கார்டையும் கொடுத்திருந்தார். மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்சனாவை வினுஷா, ஐசுவை குறித்து எதற்காக தேவை இல்லாமல் பேசுனீங்க? என்று கூறி அவரையும் வறுத்தெடுத்து விட்டார். இதை தொடர்ந்து நான்காவது புரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது .இந்த ப்ரோமோவில் மணியை பார்த்து ‘True colours coming out’ என்று சொன்னிங்களே. அப்படி என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டார்.
அதற்கு அடுத்ததாக தினேஷை பார்த்து ‘என்ன தவ்லதா பேசுறனு சொன்னீங்களே? அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார். மணி , தினேஷ், நிக்சன் மூவரையும் நிக்க வைத்து , இன்னொரு தடவை இந்த வீட்ல இது போல violence அதிகமாச்சின்னா இந்த yellow கலர் கார்டுடைய நிறம் மாறும் என்று போட்டியாளர்களை எச்சரித்துள்ளார். இவ்வாறு பரபரப்பாக இந்த ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…