நடிகர் பப்லு பிருத்விராஜ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். கண்ணான கண்ணே டிவி சீரியலில் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் இவர் ஜெயா டிவியில் நடத்திய சவால் நிகழ்ச்சி மிக பிரபலமானது. இப்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில், முக்கிய கேரக்டரில் பப்லு பிருத்விராஜ் நடிக்கிறார். இந்நிலையில், கடந்த பல மாதங்களுக்கு முன், 54 வயதான பப்லு, தன்னைவிட 30 வயது குறைந்த அதாவது 24 வயது குறைந்த பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்சிப் முறையில் குடும்பம் நடத்தினர். ஜிம்முக்கு ஒர்க் அவுட் செய்ய வந்த பெண்ணுடன், பப்லுவுக்கு ஒர்க் அவுட் ஆனதால், இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்தனர். அடிக்கடி இருவரும் உள்ள வீடியோக்கள், ரீல்ஸ்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் பப்லு பிருத்விராஜ் தனது பிறந்தநாளை ட்ரெயின் படப்பிடிப்பு தளத்தில் அங்கிருந்த கலைஞர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் ஷீத்தல் பங்கேற்கவில்லை. இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, ரீல்ஸ் எதுவும் கடந்த ஒரு மாதமாக வெளியாகவில்லை. இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் ஷீத்தலிடம் ஒரு நண்பர், நீங்களும் பப்லுவும் பிரிந்துவிட்டீர்களா, என்ற கேள்விக்கு அவர் லைக் கொடுத்து, அதை ஆமோதிக்கவும் செய்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பப்லு பிருத்விராஜூம் அதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதில் பப்லு கூறியதாவது, நான் செய்த தவறுகளை நான் புரிந்துக்கொண்டேன். நான் வெளிப்படையாக இருப்பேன். யாரிடமும் எந்த சிம்ப்பதியும் நான் ஏற்படுத்தி, எதையும் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு தேவையில்லை.

என்னுடைய அழுக்கு உள்ளாடையை மற்றவர் முன்னிலையில் நான் துவைக்க விரும்பவில்லை. நான் செய்ததை 10 பேர் ஏற்றுக்கொள்வார்கள். 10 பேர் கேலி, கிண்டல் செய்வார்கள். அதுபற்றி எனக்கு கவலையில்லை. கடந்த முறை 11 லட்சம் ரூபாய் செலவழித்து பிறந்த நாள் கொண்டாடினேன். அது வேஸ்ட். இந்தமுறை எளிமையான டிரெயின் ஷூட்டிங்கில் கொண்டாடினேன். என் வாழ்க்கை, என் ஸ்டைல், என் பேஷன், எனக்கான படங்கள் இதுவே எனக்கு போதும், என்று தெரிவித்தார். ஷீத்தலை பிரிந்து விட்டீர்களா என்ற கேள்விக்கு, நெக்ஸ்ட் கொஸ்டீன் என பதிலளித்தார். ஷீத்தலை பிரிந்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு ஏதோ மழுப்பலான பதிலை சொல்லி சமாளித்த அவர், ஷீத்தல் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்தார்.
