போட்டியாளர்களுக்கிடையே சண்டையை மூட்டிவிட புது டாஸ்க் கொடுத்த பிக் பாஸ்.. ரணகளமாக மாறப்போகும் பிக் பாஸ் வீடு…

By Begam on டிசம்பர் 8, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 67 நாட்களை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது . தற்பொழுது  வரை பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

   

வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற வைல்ட் காடு என்ட்ரி போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.  இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக தாக்கி,  எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

   

 

தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஜாக்பாட் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் ஜெயிப்பவர்களுக்கு 5 ஸ்டார்ஸ் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் தங்களுக்கு அந்த ஸ்டார்ஸ் கிடைக்கனும் என்றும் போராடலாம்.

வேறொருத்தங்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும் போராடலாம் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பூர்ணிமா விஷ்ணு முதல்ல என்னைத் தான் குத்துவாரு என்று சொல்லி மாயாவிடம் அழுகின்றார். இத்துடன் இன்றைய ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…