வெட்டியா சண்டை போட்டதுக்கு இவ்ளோ சம்பளமா..? பிக் பாஸிலிருந்து வெளியேறிய ஜோவிகாவின் சம்பளத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க…

By Begam on மார்கழி 4, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

பிக் பாஸில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா. சிறு பிள்ளை தானே எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பத்தில் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் போகப் போக  மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது.

   

 

 

மேலும் பிரதீப் விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது அவரின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதன்படி பார்த்தால் ஜோவிகா கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸில் இருந்துள்ளார். இவருக்கு  ஒரு நாளைக்கு ஒரு 18 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மொத்தமாக 10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.