“ஹீரோயின் ஆகணும்ங்கிற ஆசைல அப்டி பண்ணிட்டேன்.. கடைசில அதுவே பெரிய.”.. 40 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை சொன்ன விஷியம்..

By admin on மார்கழி 4, 2023

Spread the love

இப்போது நடிகைகள் பலரும், ஸ்லிம் ஆக காட்சியளிக்கின்றனர். இதற்கான பலவிதமான டயட் கண்ட்ரோலில் அவர்கள் இருக்கின்றனர். எப்போதும் டயட்டீசன் அவர்கள் சாப்பிடும் உணவுகள் குறித்து கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், கடந்த 1990களில் நடித்த பல நடிகைகள் சற்று குண்டாக, உடல்கட்டு அழகான தோற்றத்தில் தான் காணப்பட்டனர். அதற்கு முக்கிய உதாரணமாக குஷ்புவை சொல்லலாம். அதே போல் ரூபிணி, கனகா, அம்பிகா, ராதா, மீனா, ரம்பா, ராதிகா போன்றவர்களும் அப்படித்தான் காணப்பட்டனர். ஏனெனில் சற்று குண்டான உடல் தோற்றம் அன்றைய தமிழ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

Bhagyashree

   

தெலுங்கு, மலையாள படங்களில் அதிகமாக நடித்த நடிகை பாக்யஸ்ரீ நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சின்ன வயதில் எப்படியாவது நடிகையாகி விட வேண்டும். மோகன்லால், ரஜினி சார் போன்றவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் நான் ஒல்லியாக இருப்பேன். இதைப் பார்த்த பலரும், நீ நன்றாக சாப்பிட்டு குண்டானால் தான் படங்களில் கதாநாயகியாக நடிக்க முடியும் என்று கூறிவிட்டனர்.

   

Bhagyashree

 

அதனால், எனக்கு 14 வயதாக இருக்கும்போது உடல் வளர்ச்சிக்கான ஊசியை நிறைய முறை போட்டுக்கொண்டேன். இது தவறு. உடம்புக்கு நல்லதல்ல என டாக்டர்கள் சொல்லியும் நான் கேட்கவில்லை. இது என் அம்மாவுக்கு தெரியும். அப்பாவுக்கு தெரியாது. ஆனால், திருமணத்துக்கு பிறகு, குழந்தைகள் பெற்ற பிறகு இளம் வயதில் அந்த இன்செக்சன் போட்டது, எனக்கு சில பாதிப்புகளை உடல் ரீதியாக பல பிரச்னைகளை ஏற்படுத்தியது. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு நான் செய்த தவறு, பிறகுதான் எனக்கு புரிந்தது, என்று கூறியிருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ.