Actor Ajith Kumar

மேக்கப் உதவியாளர் முதுகில் ஓங்கி அறைந்த அஜீத்குமார், சட்டென வெளிப்பட்ட அவரது உண்மை முகம் – அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள்

By admin on மார்கழி 3, 2023

Spread the love

அஜீத்குமார் நடித்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து வந்தது. ஒருநாள் காலையில், படப்பிடிப்பில் நடிக்க வேண்டிய அனைவரும் மேக்கப் செய்து, படப்பிடிப்புக்கு தயாராகி விட்டனர். ஆனால் அஜீத்குமார் மட்டும் படப்பிடிப்பு தயாராக முடியவில்லை. காரணம் அவரது மேக்கப் மேன் உதவியாளர் வரவில்லை. அவர் மேக்கப் சாதனங்களுடன் வந்தால்தான், அஜீத்குமார் தயாராக முடியும் என்ற நிலையில் அவர் காத்திருந்தார். நீண்ட நேரமாக அவர் வராத நிலையில், ஷூட்டிங் தாமதமாகிறதே என அங்கிருந்த பலரும் டென்சன் ஆகினர்.

 Actor Ajith Kumar

   

 

   

அப்போது அங்கே அந்த மேக்கப் மேன் இளம் வயதுடைய அந்த உதவியாளர், தோளில் மாட்டிய மேக்கப் பேக்குடன் அரக்க பறக்க ஓடிவந்தார். வேர்த்து, விறுவிறுக்க அஜீத்குமாரிடம் வந்த அவர், அண்ணே, ரெண்டு பஸ் மாத்தி வந்ததுல ரொம்ப லேட் ஆயிடுச்சுண்ணே என்று மூச்சு வாங்க அவர் பேசியிருக்கிறார். அப்போது பஸ்ல வந்தியா என அஜீத் கேட்டிருக்கிறார். ஆமாண்ணே என்று அவர் கூற, உன்னிடம் பைக் எதுவும் இல்லையா என்றும் கேட்டிருக்கிறார்.

 

 Actor Ajith Kumar

அடுத்து ஒரு புது பைக்கை அந்த மேக்கப் அசிஸ்டெண்டுக்கு வரவழைத்து தந்திருக்கிறார் அஜீத்குமார். பைக் சாவியை அந்த இளைஞரிடம் கொடுத்த அஜீத், இனிமேல் பைக்குல வந்துட்டு போ, இப்படி லேட் பண்ணக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். அப்போது பைக் சாவியை அஜீத்குமாரிடம் திருப்பிக்கொடுத்த அந்த உதவியாளர், என்னை ஆசிர்வாதம் செய்து, சாவியை கொடுங்கண்ணே என்று கூற, குனிந்திருந்த அவரது முதுகில் படீர் என சிறு அடி அடித்த அஜீத்குமார், இதெல்லாம் எனக்கு பிடிக்காது, எந்திரி என மெல்லமாய் புன்னகைத்து சாவியை அந்த மேக்கப் அசிஸ்டெண்டுக்கு தந்திருக்கிறார். படப்பிடிப்புக்கு லேட்டாக வந்த மேக்கப் அசிஸ்டெண்டுக்கு பைக் வாங்கி தந்த அஜீத்குமாரின் உண்மையான, நல்ல குணத்தை பார்த்து அங்கு இருந்த படக்குழுவினரும், சக நடிகர்களும் அசந்து போய் நின்றுள்ளனர்.