விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார். இவர்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் எனவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது. நடிகை வனிதா தனது மகளுக்கு ஆதரவாக தனது இணையதள பக்கங்களிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் .

அதோடு மட்டுமின்றி இவர் பல சேனல்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனமும் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதா திடீரென ‘தன்னை பலமாக யாரோ அடித்ததாகவும், அவர் ‘ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா? என்று கேட்டதாகவும், எனவே அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தான் எனவும் கூறி அடிபட்ட காயத்துடன், புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி படுவைரலானது.

இந்நிலையில் மீண்டும் அவர் தற்பொழுது biggboss review பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்பொழுது அவர் கொடுத்த பேட்டியில், நடிகர் கமலஹாசனை ‘கேட்கிறது ஆள் இல்லைன்னு ரொம்ப அராஜகம் பண்றாரு’ என்றும் , ஜோவிகா மட்டும் உள்ள இருந்தான்னா, நான் ஃபேமிலி ரவுண்டு போகும்போது நல்லா போயி ஏத்திவிட்டு எல்லாரையும் கமல்ஹாசன் சாருக்கு against -ஆ பத்த வச்சுவிடுவேன். அவர நீங்க எல்லாரும் வச்சு செய்யுங்க என்று ஏத்தி விடுறேன் பாருங்க’ என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
மேலும் கமல் சார் ‘இதே போல, இப்படியே கமலஹாசன் சார்பண்ணாருன்னா, அடுத்த சீசனையே நான் பார்க்க மாட்டேன். ரிவ்யூவும் பண்ண மாட்டேன். எனக்கு வாய் வலிக்குது. தலைவலிக்குது உண்மையா சொல்றேன். அதை யார் வேணா தப்பா எடுத்துட்டு போறாங்க’ என்று வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளார் வனிதா. இதை பார்த்த ரசிகர்கள் ‘அடி வாங்கியும் இன்னும் நீ திருந்தலையே’ என்று அவரை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
