தமிழ், மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

By Begam on மார்கழி 1, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தவர் நடிகை சுப்பலட்சுமி. அதே போல இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 66 வயதில்  வெள்ளித்திரையில் கால்பதித்த  இவரின் தற்பொழுது வயது 87. தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் கல்யாணராமன்,  நந்தனம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

   

தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் நடித்திருந்தாலும், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆங்கிலம் , ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சுப்புலட்சுமி. இவர் நடிகையாக மட்டுமின்றி இசைக்கலைஞர்,  நடனகலைஞர்,  ஓவியர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

   

 

இதுமட்டுமின்றி அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 87 வயதான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை ஆர். சுப்பலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.இவரது மறைவை தொடர்ந்து தமிழ் திரை உலக பிரபலங்களும், மலையாள திரையுலக பிரபலங்களும் என சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்