பெற்ற மகனின் பட பூஜையில் கூட பங்கேற்காதது ஏன்..? “நானெல்லாம் வேற லெவல்” என வாயைவிட்ட இளைய மக்கள் செல்வன்..

By admin on கார்த்திகை 26, 2023

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி. அனல் அரசு இயக்கத்தில் பினிக்ஸ் என்ற படத்தில் புதுமுகமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜையில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கவில்லை. சொந்த மகன் நடிக்கும் முதல் படத்தின் துவக்க விழாவில், அப்பா பங்கேற்காதது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அவர் மலேசியாவில் நடந்த ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், விஜய் சேதுபதி இந்த பட பூஜையில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

 Actor Vijay Sethupathi

   

இந்நிலையில் பினிக்ஸ் படத்தின் பூஜை விழாவில் பங்கேற்ற சூர்யா விஜய் சேதுபதி, கத்துக்குட்டித்தனமாக பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் அவரது பேச்சு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. என் அப்பா மூலமாக நான் சினிமாவுக்குள் வரவில்லை. அவரது மகனாக இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. என் அப்பா நடித்த ஷூட்டிங் ஒன்றுக்கு நான் சாப்பாடு கொண்டு சென்றேன். அப்போது இந்த படத்தில் நடிக்குமாறு அனல் அரசு கேட்டார். அதனால், ஒத்துக்கொண்டேன். என் அப்பா ஆதரவை நான் நம்பவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை என்ற டைப்பில் அவர் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்.

   

 Actor Vijay Sethupathi

 

இதுகுறித்து ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் சுபேர் கூறுகையில், சூர்யா விஜய் சேதுபதி மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். சினிமாவில் தங்களது வாரிசுகளை, பெரும்பாலான ஹீரோ நடிகர்கள், தனது ஹீரோ மார்க்கெட்டிங் குறைந்த பிறகுதான், மகன்களை சினிமாவில் அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால் ஒரே டைமில் விஜய் சேதுபதியும் ஹீரோ, அவரது மகனும் ஹீரோ என்பது சரியாக வராது. அவர்தான் முறைப்படி தனது மகனை செய்தியாளர்கள், ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, எனக்கு தந்தது போல என் மகனுக்கும் ஆதரவு கொடுங்கள் என கேட்டிருக்க வேண்டும். சூர்யா விஜய் சேதுபதியை வழிநடத்த நிச்சயம் அனுபவமுள்ள ஒருவர் பக்கத்தில் இருப்பது மிக முக்கியம், என்று கூறியிருக்கிறார் சுபேர்.