‘நீங்கதான் என்ன பிடிக்கும்னு Insta-ல  எனக்கு மெசேஜ் அனுப்புனீங்க’… மேடையில் பெரிய குண்டை தூக்கி போட்ட பெண்…  திருதிருவென முழிக்கும் விஷால்… வைரலாகும் வீடியோ…

By Begam on கார்த்திகை 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

   

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன. இந்நிலையில், எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வந்தார் விஷால். இந்நிலையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டினர்.

   

 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷாலிடம் ,மேடையில் பெண் ஒருவர் ‘நீங்கதான சார் எனக்கு இன்ஸ்டா-ல என்ன பிடிக்கும்னு எனக்கு மெசேஜ் பன்னீங்க’ என கூறுகிறார். இவர் ஏற்கனவே நடிகர் அசோக் செல்வனை ப்ரொபோஸ் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு நடிகர் விஷால் நான் இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் இது போன்ற எந்த சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவது கிடையாது. இதற்கென்று ஒரு தனி குரூப் இருக்கின்றனர்.

அவர்கள் நான் சொல்லும் மெசேஜ்களை பதிவு செய்து விடுகின்றனர் என கூற,  மேலும் தன்னுடைய பெயர் ‘ஸ்ரீ ரெட்டி’ என்றும் அந்தப் பெண் கூறுகிறார். மேலும் விஷால் ‘அவங்க என்னமா மெசேஜ் பண்ணாங்க? என்று கேட்க,  ‘என்ன ரொம்ப புடிக்கும்’ மெசேஜ் பண்ணாங்க, என்று அவர் கூற ‘இருமா இந்த ஷோ முடிஞ்சதும் அவங்கள  என்னன்னு கேட்கிறேன்’ என்று நடிகர் விஷால் கூறுவது போல இந்த வீடியோ முடிந்துள்ளது. தற்போது இந்த வீடியோ உண்மை இல்லை என்றும்,  படத்தின் ப்ரோமோஷன் வீடியோ என்றும் கூறப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)