Connect with us

CINEMA

அம்மாவுக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சாய் பல்லவியின் தங்கை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் சாய் பல்லவி. பிரேமம் என்ற ஒரே படத்தில் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார் சாய் பல்லவி. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமானார் சாய் பல்லவி. வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

   

ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் சாய் பல்லவி. அதன்பின்னர் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் நடிப்பில் விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய திரைப்படமொன்றில் கமிட்டாகியுள்ளார். இதுமட்டுமின்றி  பல திரைப்படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவிக்கு ஒரு தங்கையும் உள்ளார். அவரின் பெயர் பூஜா கண்ணன். இவரும் தற்பொழுது நடிகையாக களமிறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்றிருந்த நடிகை பூஜா கண்ணன் திடீரென திரும்பி வந்து தனது அம்மாவை சர்ப்ரைஸ் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Pooja Kannan (@poojakannan_97)

Continue Reading

More in CINEMA

To Top