என்னது இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா…? ‘கைதி’ பட நடிகரின் மனைவிக்கு சிறப்பாக நடந்து முடிந்த வளைகாப்பு… குவியும் வாழ்த்துக்கள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , தற்பொழுது பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் உதய் ராஜ். இவர் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த ‘ஆயுதம், திருடா திருடி’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருந்தார்.இதைத்தொடர்ந்து நடிகர் விஜயுடன் இணைந்து திருமலை படத்தில் நடித்திருந்தார்.

   

இப்படி படிப்படியாக முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கிய இவர் ‘திருமலை’ படத்துக்கு பிறகு, 2010ல் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில் அதர்வாவின் நண்பராக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி சிறு கத்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது.

அதுதான் நடிகர் கார்த்தியுடன் ‘கைதி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு.  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் நடிப்பு  பெரிதும் பேசப்பட்டது. இப்படி வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான இவரை பலரும் சிறுபையன் என்றே நினைத்துக் கொண்டுள்ளனர்.

அனால் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையே இருக்கிறது. அதோடு மட்டுமின்றி இவரது மனைவியும் ஒரு நடிகையே. இந்நிலையில் தற்பொழுது இரண்டாவது முறையாக நடிகர் உதயாவின் மனைவி கர்பமடைந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு வளைகாப்பும் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sai Subha (@saisubha_hairstylist)