கணவருடன் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை… இப்பவும் அதேபோல ஹேண்ட்ஸமா இருக்காரே…

By Begam on கார்த்திகை 18, 2023

Spread the love

90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து அவர் செந்தூரப்பூவே, சூரசம்காரம், பட்டிக்காட்டுத்தம்பி, என் கணவர், கைவீசம்மா கைவீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும்,

   

பாண்டி நாட்டு தங்கம், இணைந்த கைகள், பறவைகள் பலவிதம், மருதுபாண்டி, காவலுக்கு கெட்டிக்காரன், மைந்தன், பாரம்பரியம், சிலம்பாட்டம், படிக்காதவன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை நிரோஷா.

   

 

இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமா வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்த நடிகை நிரோஷா ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.  தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டார்ஸ்  சீரியலில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக கலக்கி கொண்டு வரும் நடிகை நிரோஷா சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் . தற்பொழுது இவர் தனது கணவர் ராம்கி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nirosha Ratha (@nirosha_radha)