![அணு - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/11/அணு.jpg)
GALLERY
நாங்களும் வரலாமா..? நண்பர்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற தனுஷ் பட நடிகை.. வைரலாகும் ஃபோட்டோஸ்..!!
முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் மேரி ஜார்ஜ் ஆக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனையடுத்து தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் கொடி படத்தில் நடித்து பிரபலமானார்.
பிரேமம் படத்தில் க்யூட் பெண்ணாக நடித்த அனுபமா கொடி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் களம் இறங்கினார். அதன்பிறகு தமிழில் அனுபமாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் அவர் பிஸியாக நடித்தார்.
தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தும் அவர் ஏன் நடிக்காமல் போனார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2021-ஆம் ஆண்டு தள்ளி போகாதே படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஒரே வருடத்தில் தெலுங்கு சினிமாவில் அனுபமா 5 படங்களில் நடித்தார். தற்போது தமிழில் சைரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா உடன் அனுபமா நடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது நண்பர்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற புகைப்படத்தை அனுபமா வெளியிட்டுள்ளார். அந்த படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.