இத்தனை நாளா இந்த செல்லத்த எங்கதான் மறைச்சு வைச்சிருந்தீங்க… நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளை பாத்துருக்கீங்களா..?

By Begam

Updated on:

1990களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் சினிமாவில் பிஸியாக  காணப்படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

   

இவர் தற்பொழுது வெளியான நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் கூட ஹரால்டு தாஸாக நடித்து அசத்தியிருந்தார். நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

 

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் இவருக்கும் நடிகர் தம்பி ராமையா மகனான உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் சினிமாவில் கால்பதிக்கவில்லை. இவர் அன்றாடம் நம் உண்ணும் பழங்களிலிருந்து தூக்கி எறியும் பழத்தோல்களை வைத்து ஹேண்ட் பேக்கை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார் .

பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுது உலகிலேயே இதுவே முதல் முறை. இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும், அவர் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இத்தனை நாளா இந்த செல்லத்த எங்கதான் மறைச்சு வைச்சிருந்தீங்க’ என்றும், பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே’ கமெண்ட் செய்து வருகின்றனர்.