நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் வில்லன் அனுப்பிய ஆட்கள் ரஜினியின் பேரனை கொலை செய்ய முயற்சி செய்வார்கள். ரஜினியின் பேரன் கழுத்தை கத்தியால் வெட்ட ஆட்கள் முயற்சி செய்யும் போது ஸ்மார்ட்டாக செயல்பட்டு ரஜினி தனது பேரனை காப்பாற்றி விடுவார்.

இந்த காட்சி திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது . இதே போலவே பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல் ஜெயலர் பட காட்சியை காப்பி அடித்துள்ளது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோவின் மகளை வில்லன் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்வார்கள்.

அப்போது ரஜினி எப்படி தனது பேரனை காப்பாற்றினாரோ அதேபோலவே சீரியல் ஹீரோ தனது மகளை காப்பாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஜெயிலர் படத்தை காப்பி அடிச்சிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

