அடேங்கப்பா..! விஜயின் லியோ பட சம்பளத்தை முந்திய KGF யாஷ்.. அதுவும் இத்தனை கோடியா..?

By admin on ஐப்பசி 26, 2023

Spread the love

பிரபல ஹிந்தி இயக்குனரான நித்தேஷ் திவாரி ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்க உள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்க உள்ளனர். சீதையாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.

முதலில் ஆலியா பட் ரீதியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் விலகியதால் சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்கிறார். அடுத்த வருடம் பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும் ஜூலை மாதம் முதல் யாஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

   

   

இது தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் நடிக்க விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது.

 

அப்படி இருக்க ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் சம்பளமாக 150 கோடி ரூபாய் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் கால் ஷீட் எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து சம்பளம் மாறும் என செய்திகள் வலம் வருகிறது.