தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி இமான். இவரது இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியானது. பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். இமானின் முதல் மனைவி மோனிகா. இவர்களுக்கு வெரோனிகா, பிளஸ்சிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இமான் மோனிகா தம்பதியினர் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து அமலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் இமான், சிவகார்த்திகேயன் பெரிய துரோகம் செய்ததாகவும், அதனாலே அவர் படத்திற்கு இந்த ஜென்மத்தில் இசையமைக்க மாட்டேன் என கூறியிருந்தார்.
இது பூதாகரமாக வெடித்ததும் இமானின் முதல் மனைவி மோனிகா தலையிட்டு சிவகார்த்திகேயன் ஜென்டில்மேன். எங்கள் விவாகரத்து விஷயத்தில் எனக்கு ஆதரவாக பேசியதால் இமான் அப்படி சொல்கிறார் என வீடியோவில் பேசியிருந்தார். இப்போது வரை இதற்கு சிவகார்த்திகேயன் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் ஈமான் மற்றும் சிவகார்த்திகேயனின் பழைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இமான் தனது மனைவி மோனிகாவுடன் இருக்கும் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ..