லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வந்தாலும் படம் பெரும்பாலான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இத்திரைப்படம் உலகளவில் முதல் நாளிலேயே 148.5 கோடி ரூபாயை வசூலித்து சாதனையும் படைத்துள்ளது. தற்பொழுது லியோ வெளியாகி 4 நாட்களை கடந்த நிலையில் சுமார் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படி ஒருபுறம் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை கொண்டாடினாலும், மறுபுறம் நெகடிவ் விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் லியோ படத்தை பார்த்து விட்டு திரையரங்கிற்கு வெளியில் விமர்சனம் செய்த முதியவர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அவர் யார் என்பது குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து , சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அடையாளம் தெரியாமல் போனவர் தான் நடிகர் சத்யேந்திரா.

இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர் ரஜினி, ரகுவரன் என்று பல முன்னணி நடிகர்கள் உடன் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு ரஜினி, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள். இவர் விசில் படத்தில் கூட நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். தற்பொழுது இவர் லியோ திரைப்படம் பார்த்துவிட்டு கழுவி கழுவி ஊத்திய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ‘ அனிருதுக்கு சுத்தமாக music konwledge இல்ல’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
