போற போக்க பாத்தா ‘ஜெயிலர’ பீட் பண்ணிடும் போலயே… 4 நாட்களிலேயே  கலெக்ஷனில் தூள் கிளப்பிய ‘லியோ’… எவ்வளவு தெரியுமா…?

By Begam on ஐப்பசி 23, 2023

Spread the love

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம்,  தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்தத்தின் விளைவு தான் இந்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

   

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற சிக்கல் நிலவி வந்தது. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஆடியோ லான்ச் ரத்து, ரோகிணி தியேட்டர் இருக்கைகள் சேதம், கடைசி வரை தியேட்டர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் பங்கீட்டில் பிரச்சனை என பல பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது.

   

 

மேலும் இத்திரைப்படம் உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்ததன் மூலமாக தளபதி என்றும் மாஸ் தளபதி தான் என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது லியோ  4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக லியோ திரைப்படம் உலகளவில் இதுவரை 392 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சனி , ஞாயிறு விடுமுறை இதைத்தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் லியோ படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ முறியடிக்கும் என தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக இதனை கொண்டாடி வருகின்றனர்.